ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை – புத்தி இருந்தால் சாக்கிரதையாய் நடக்கட்டும் – இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அதுபோலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமைகளை) உண்டாக்கிவிட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகள் – புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தனால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’