எல்லோரையும் கொசுக்கள் ஒரே மாதிரிதான் கடிக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கொசுவுக்கும் கொஞ்சம் ‘சுவை’ தேவைப்படுகிறது. கொசுக்கள் ‘O’ ரத்த பிரிவினரையே அதிகமாக விரும்புகின்றன என ஒரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘A’ ரத்த பிரிவினரை மிக குறைந்த அளவிலேயே கடிக்கிறதாம். இவற்றுடன், வியர்வை அதிகமாக வருபவர்களை கொசுக்கள் குறிவைத்து தாக்குமாம். நீங்க என்ன பிளட் குரூப்?