செய்யாறு, ஜூலை 4– செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் – வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு – மாவட்டம் முழுவதும் கூட்டங்கள் நடத்திக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 2.7.2023
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர் தி. காம ராசன் இல்லத்தில், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வட மணப்பாக்கம் வெ. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.
தலைமை கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் தொடக்க உரையாற்றினார். அவர் தம் உரையில், பகுத்தறிவு, சுயமரி யாதை, சமத்துவம், பெண்ணுரிமை, பகுத்தறிவாளர்கள் கழகம் ஆகி யவை குறித்து தந்தை பெரியாரின் கொள்கை விளக்கத்தையும் கழகத் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டு தல்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மாவட்ட கழகத் தலைவர் அ. இளங்கோவன், நகர கழகத் தலை வர் தி. காமராசன், மகளிரணித் தோழர் முனைவர் தமிழ்மொழி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வி. என். கோவிந்தன், சின்னதுரை, வடமணப்பாக்கம் கழகத் தலைவர் வெங்கடேசன், செ.அரவிந், வெ. மனோஜ்குமார் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் தோற்றுவித்ததின் நோக் கம், தமிழர் தலைவரின் வழிகாட் டுதல்கள், பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் நடைபெற்ற மாநாடு கள், பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவ சியம், ‘பெரியார் 1000’ போட்டி களை நடத்துவதற்கான தேவை கள், பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர் சேர்ப்பு, ஒன்றியந்தோ றும் பகுத்தறிவாளர் கழகத்தினு டைய அமைப்பு இருக்க வேண்டிய தேவை குறித்தும் பல்வேறு செய்தி களைக் குறிப்பிட்டு சிறப்புரை ஆற்றினார்.
வைக்கம் நூற்றாண்டு, முத்த மிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஆகியவற்றை, மாவட்டம் முழுவ தும் கிராமங்கள் தோறும் பிரச் சாரக் கூட்டங்கள் நடத்தி கொண் டாடுவது எனவும், ‘பெரியார் 1000’ போட்டிகளை மாவட்டம் முழுவ தும் நடத்துவது எனவும், பகுத்தறி வாளர் கழகத்திற்கு ஒன்றியந்தோ றும் அமைப்புகளை உருவாக்குவது எனவும், பகுத்தறிவாளர் கழகத் திற்கு 100 உறுப்பினர்களைச் சேர்ப்பது எனவும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பயிற்சி முகாம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பகுத்தறிவாளர் கழகத் தோழர் தா.சோமநாதனின் தந்தையார் தாந்தோணி அவர்கள் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்தின் செயலாளர் வி.என். கோவிந் தன் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் பொன். சுந்தர், டி.என். கஜபதி, டி. காசிமணி, உடற்கல்வி சோமநாதன் உள்ளிட்ட தோழர் களும் பங்கேற்றனர்.