தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். – அமித்ஷா
‘‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மட்டுமே! கூட்டணி ஆட்சி கிடையாது. (2026 தேர்தலில் அ.தி.மு.க. வென்றால்)’’
– எடப்பாடி பழனிசாமி
கூட்டணிபற்றிப் பேசியது அமித்ஷாதான். எனவே, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து அந்த நேரத்தில் அமித்ஷா முடிவெடுப்பார்.
– தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர், நயினார் நாகேந்திரன்
தொடக்கத்திலேயே இந்த கோஷ்டி கானத்தில் ‘‘சுருதி பேதம்’’ – இனியும் எத்தனை எத்தனையோ?
இந்த ஓநாய் – ஆட்டுக்குட்டி கூட்டின் வினையும், விளைவுகளும் போகப் போக மக்களுக்குப் புரியும்!
‘எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இனி இல்லை’ என்று முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதுபோல்தான் அவரது அறிவிப்பும் காற்றில் பறக்கப் போகும் ஒன்றா?
கூட்டணி சேரும் முன்னரே முடிவு செய்யவேண்டாமா?
தொடக்கமே சுருதி பேதத்தில்தானா?
Leave a Comment