ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 70, ஜூனியர் மேனேஜர் 10 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய்., / எம்.இ.,/எம்.டெக்., / எம்.பி.ஏ. வயது: 18 – 28 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி. விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 25.4.2025 விவரங்களுக்கு: avnl.co.in தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்கள் தமிழ்நாடு காவல் துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) 933, காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) 366 என மொத்தம் 1299 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 390 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கான பற்றாக்குறை காலியிடங்கள் 53 உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது: 20-30 (1.7.2025இன்படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. உடல் தகுதி: உயரம் குறைந்தது170 செ.மீ., (பெண்கள் 159 செ.மீ.,). எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 167 செ.மீ., (பெண்கள் 157 செ.மீ.,) விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி. விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 கடைசி நாள்: 3.5.2025 விவரங்களுக்கு: tnusrb.tn.gov.in