தமிழ்நாடு அரசின் துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) பல்வேறு முக்கிய பதவி களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேனேஜர், நிறுவன செயலாளர், ஆலோசகர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் இணையம் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) பல்வேறு முக்கிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியாகியுள்ளது. ஒப்பந்த முறையில் முக்கிய பதவிகள் நிரப்பப்படுகிறது. மேனேஜர், நிறுவன செயலாளர், ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்: மேனேஜர் (நிதி மற்றும் கணக்கு) – 2, நிறுவன செயலாளர் – 2, ஆலோசகர் (சட்டம்) -1, மொத்தம்-5
வயது வரம்பு: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் உள்ள மேனேஜர், நிறுவன செயலாளர் ஆகிய பதவிகளுக்கு 01.01.2025 தேதியின்படி 45 வயது வரை இருக்கலாம். ஆலோசகர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: நிதி மற்றும் கணக்கு பிரிவின் கீழ் உள்ள மேனேஜர் பதவிக்கு CA / CMA / MBA ஆகியவை அல்லது அதற்கு நிகரான கல்வியை பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
நிறுவன செயலாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் ACS முடித்திருக்க வேண்டும். ACA/ ACMA ஆகிய முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை. 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
ஆலோசகர் பதவிக்கு முழு நேர LLB முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
ஊதிய விவரம்: நிதி மற்றும் கணக்கு பிரிவின் கீழ் உள்ள மேனேஜர் பதவிக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் ரூ.1,00,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
நிறுவன செயலாளர் பதவிக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ரூ.80,000 ஊதியமாக வழங்கப்படும்.
சட்டப்பிரிவில் கீழ் உள்ள ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.75,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து தகுதியானவர்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு முன்பு அனுபவ சான்றிதழ் மற்றும் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.tidco.com/ என்ற இணையதளத்தில் இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2025 மாலை 5 மணி வரை
நேர்காணலில் தேர்வு செய்யப் பட்டவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும்.