இந்து முன்னணி நிர்வாகி கைது
மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் காட்சிப் பதிவு பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில்
லஞ்சம் வாங்கியவருக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிறை
திருவாரூரில் கடந்த 2014ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட நகராட்சி கட்டட ஆய்வாளர் நாகராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கை: காணாமல் போன மாணவிகள் மீட்பு
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி பாடத்தை எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகளும் திருச்சி அருகே மீட்கப்பட்டனர். மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், 5 பேரும் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர்
தமிழில் மட்டுமே
இனி அரசாணை
தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும்; கற்றாணைக் குறிப்புகள் தமிழிலே இருக்க வேண்டும், அரசுப்பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு உத்தரவு
முதலமைச்சர்
தலைமையில் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களின் கூட்டம் இன்று (16.4.2025) நடக்க உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது.