மகிழ்வான வாழ்க்கைக்கு நஞ்சாகலாமா? ‘தன்முனைப்பு’ (Ego)

2 Min Read

பல குடும்பங்களில் ஈகோவை முன் வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ் வின் வேர்களில் இணையரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. போற்றி வளர்த்த காதலை, பல இணையர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

எந்த உறவானாலும் அதன் உறு தியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சி னைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இரு வரில் ஒருவர் பக்குவக் குறைவான வராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவா கரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்தி ருக்கும் இணையர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறி வுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

மணவாழ்வில் ஒருவர் தன்னை மட் டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறி யவர்களை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவ தொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

கடந்த தலைமுறையில் மனை வியைவிடக் கணவனின் வயது பொது வாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற் றுடன் கலாச்சாரம் சார்ந்தும் இணையர் இருவரும் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப் பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப் பதால் இளம் இணையருக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக் கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்த னையற்ற அன்பும் கொண்ட இணையரிடையே ஈகோ எடுபடுவ தில்லை.

கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உண ரும்போது ஒருவகையான பாதுகாப் பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத் தவரை மட்டம் தட்டுவதற்கே பயன் படுத்தப்படுகிறது.

ஒருவருக்கொருவர் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்தி லேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது.

உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற் றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக் கும்போது சக இணையரின் பலவீனத் தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *