வாரணாசி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அன்மோல் குப்தாவின் அலைபேசியில் 500-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 19 வயது சிறுமியை 23 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் விசாரணை நிலை குறித்து பிரதமர் மோடியே நேரடியாக கேட்டறிந்தார். இதனால், இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.