கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பொது சிவில் சட்டம் பழங்குடியினருக்கும் பொருந்தாது, நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் குமார் மோடி கருத்து.
* எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும், காங்கிரஸ் அறிவிப்பு.
* மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை. உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்திட மணிப்பூர் அரசுக்கு உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கருநாடகாவில் மேனாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட பல பாஜக தலைவர்கள் சட்ட விரோதமாக பணத்தை பிட்காயினில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரை விசாரிக்க சித்தராமையா அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு.
தி இந்து:
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜூலை 11 முதல் விசாரிக்கிறது.
– குடந்தை கருணா