மலச்சிக்கலுக்கான காரணங்கள்
அன்றாடம், மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்குப் பாதை அமைக்கும். குறிப்பாக, மலம் வருகின்ற உணர்வு உண்டாகும்போது, கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து, மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் ஏற்படச் சில காரணங்கள்
1) உணவில் ஒழுங்கீனம். 2) மனக்கவலை. 3) சரீர உழைப்பில்லாத வாழ்க்கை. 4) அவசர வாழ்க்கை. 5) பழக்கமில்லா இடம், சுற்றுப்புறம், நேரம், வெளியூர்ப் பயணம். 6) மருந்துகள். 7) குடல் நோய்கள். 8) பித்தப்பை, குடல்வால் போன்ற உறுப்பு அழற்சிகள். 9) ஆசனவாய் நோய்கள், மூலம் ஆசன வாய்ப்பிளவு போன்றவை. 10) காய்ச்சல் போன்ற உடல் நோய்கள்
முதுமை, நார்ப்பொருள் இல்லா உணவு பொதுவாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததும் மலச்சிக்கலுக்கு வழிகோலும்.
உணவு
(குறைந்தளவு காய்கறி, கீரை, பழம், பயறு சாப்பிடுவது) மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள், அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.
வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் (எ.கா.: இரும்பு, கால்சியம்) மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். மலச்சிக்கலைப் போக்குவதற்காகப் பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்தப் பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் நாளடைவில் மலச்சிக்கல் உண்டாகும்.
காய்ச்சல், வாந்தி, பசிக்குறைவு, அதிகமான அழுத்தம் போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும்.
நோய்கள்
மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டி குலைட்டிஸ்’ எனும் பெருங்குடல் பக்கப்பை நோய், நீரிழிவு நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேராதைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத்தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும் போது மலச்சிக்கல் ஒரு முக்கியமான அறிகுறியாக வெளிப்படும்.
உடற்பயிற்சி இன்மை
வயதுக்குத் தேவையான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு. எப்போது கவனிக்க வேண்டும்? மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டுப் பொறுக்கமுடியாத வலியுடன் கூடிய ரத்தக்கசிவு உண்டாகும். மேலும் மலம் வரும்போது கழிக்காமல் அடக்கி வைத்துக்கொள்வது, பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தலால் மலம் இறுகிப்போவது போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படும். இது தவிர, பெண்களில் சிலருக்குக் கருவுற்றபோதும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பும் மலச்சிக்கல் ஏற்படும். இத்துடன், அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம்.
எவ்வாறு விடுபடுவது?
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரிசெய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். மைதாவில் செய்த உணவுகளான பரோட்டா, நூடுல்ஸ் மற்றும் இறைச்சி போன்றவற்றை உண்ண வேண்டாம்.
நீர் வறட்சி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும்.
எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும்.
நாள்தோறும் 8 குவளை நீர் அருந்தவும். மலச்சிக்கல் உள்ளவர், காலையில் வெந்நீர் குடிக்கவும்.
மருந்துகள்
இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்து களைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும்.
மருந்தின் அளவு கூடும்போது புற்றா என சந்தேகித்து பெருங்குடல் உள்நோக்கி (எண்டோஸ்கோப்பி) சோதனையும், தைராய்டு சோதனையும் அவசியம்.
பேதி மருந்து பெருங்குடல் – தொடர் பேதி மாத்திரை ஆபத்தானது!
அதிக அளவு பேதி மாத்திரைகளைப் பல ஆண்டுகள் உண்டு வருவதால், சிலருக்குக் குடல் பெருத்து அசைவற்றுக் காணப்படும்.
மலச்சிக்கல் தடுப்பு முறைகள்
1) பழம் உண்ண வேண்டும்
2) காய்கறி சாப்பிட வேண்டும்
3) தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி
4) தண்ணீர் ஒரு நாளில் மூன்று லிட்டர்
(எ.கா) காஸ்காராவும் சென்னா மருந்துகளும்தான் இதற்கு மூலகாரண மாக உள்ளன. எக்ஸ்ரேயில் பொதுவாக குடல் பெருத்துக் காணப்படு வதுடன், குறுக்கத்துடன் கூடிய இடர்ப்பாடுகளுடன் பெரும்பாலும் வலது பெருங்குடலில் காணப்படும். குடல் உள்ளே சளிப்படலம், நிறம் கருத்து வளைகுடல் உள்நோக்கி மூலம் காணப்படும். இதற்கு மருத்துவம் பெற அறுவை மருத்துவரை நாட வேண்டும்.