திராவிட இயக்க இளம் எழுத்தாளர், சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை ஆய்வு பூர்வமாக ‘முரசொலி’யில் தொடர்ந்து எழுதிவந்த தோழர் சு.விஜயபாஸ்கர் (40) நேற்று (12.4.2025) சென்னையில் விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியுற்றோம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கொள்கையாளர்; சிங்கப்பூரிலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டவர். EWS – உயர் ஜாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு குறித்த அவரது தொகுப்பு நூல் மிக முக்கியமானதாகும்.
இளம் வயதில் இத்தகையோரை இழப்பது திராவிடர் இயக்கத்திற்கும், சமூகநீதி உணர்வாளர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என இயக்கம் சார்ந்தோராவர்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஏற்கவியலாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
13.4.2025