இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி வாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் Air traffic control பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27 வயதிற்கு உட்பட்ட இளங்கலை பட்டப் படிப்பு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு நடைபெறும். மாதம் குறைந்தபட்சம் ரூ.40,000 -ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும். வரும் ஏப்ரல் 25 தொடங்கி, மே 25 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் தொழிலக உற்பத்தி – 6 மாதங்கள் காணாத சரிவு
நாட்டில் தொழிலக உற்பத்தி கடந்த பிப்ரவரியில் முந்தைய 6 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலக தரவுபடி உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2.9 சதவீதமாகக் குறைந்தது. இது, 2024 பிப்ரவரியில் 4.9 சதவீதம் ஆக இருந்தது. மூலதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் தலா 1.7சதவீதம், மின்சாரத் துறை உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.
பா.ஜ.க.வின் தந்திரம் இதுதான்: ராகுல்
பாஜக- ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மகாத்மா புலேவிற்கு மரியாதை செலுத்தும் அதேவேளையில், அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை தணிக்கை செய்வார்கள் என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜாதிய பாகுபாட்டிற்கு எதிராக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரின் தியாகங்கள் திரையில் வருவதை பாஜக விரும்பவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை அழிக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.