டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அதிமுக-பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
* ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமல்: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் எனது வருகைக்குப் பிறகு மேனாள் பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, ராஜஸ்தான் கோவிலை ‘சுத்திகரிப்பு’ செய்ததால், நான் அமைதியற்றவனாக இருந்தேன்’; தூங்க முடியவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவரான எனக்கே இந்த நிலை என்றால், எளிய மக்களின் கதி? ஆனாலும் எனது கட்சியின் தலைமை, கார்கே மற்றும் ராகுல் காந்தி எனக்கு ஆதரவாக இருந்தது நிம்மதியை தந்துள்ளது என டிகா ராம் ஜூலி, எம்.எல்.ஏ. பேச்சு.
* மசோதாக்கள் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள ஆளுநர் பேச்சு சர்ச்சையானது; உச்ச நீதிமன்றத்தின் அமர்வு இந்த பிரச்சினையை அரசியலமைப்பு அமர்விற்கு பரிந்துரைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டி, கேரள ஆளுநருக்கு சிபிஎம், காங்கிரஸ் கடும் கண்டனம்.
எகனாமிக் டைம்ஸ்:
* திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைப்ப தில்லை ஓபிசி கைவினைஞர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள்: ராகுல் காந்தி வருத்தம். “உழைப் பாளிகளாக இருந்தபோதிலும் இந்த இளைஞர்கள் புறக்கணிப்பு மற்றும் அநீதியின் தீய வட்டத்தில் சிக்கியுள்ளனர். எனது போராட்டம் இந்த தீய வட்டத்தை உடைப்பதாகும்.” என ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
தி டெலிகிராப்:
*எஸ்.சி., ஓபிசிகளுக்கான துணிகர மூலதன நிதி (VCF) திட்டங்கள், மற்றும் தொடக்க நிதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாக ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தகவல் அளித்துள்ளது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.4.2025
Leave a Comment