வாசிங்டன், ஏப். 13- அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களாக கருதப்படும் 6,000 பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்க ளின் சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத் தின் போது அறிவிக்கப்பட்ட
வாக் குறுதியின்படி, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அமெரிக்க ராணுவ விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், மற்றொரு அதிரடி அறிவிப்பை டிரம்ப் மேற்கொண்டுஉள்ளார். இதன்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படும் 6,000 பேரை இறந்ததாக, டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. அமெ ரிக்காவில் வாழ்வதற்கு அந்த எண் அவசியம் என்ற நிலையில், அது ரத்து செய்யப்பட்டுஉள்ளதால், அவர்கள் தாங்களாகவே அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இறந்தவர்களாக அறிவிக்கப் பட்ட 6,000 பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களின் சமூக எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் அங்கு வசிக்கவோ, வேலை செய்யவோ, வேறு சலுகைகளை பெறவோ முடியாது.