M.K.Stalin
On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal — a torchbearer of social justice whose Commission exposed the structural denial of opportunity to OBCs.
The Dravidian movement stood firmly with his vision, even before the nation recognised it. The battle he championed is far from over. Many of his bold and fair recommendations still gather dust, and the pursuit of social justice continues to face resistance in new forms. Honouring #BPMandal means implementing his full vision, not diluting it. We remain committed to that fight.
பி.பி.மண்டல் நினைவு நாளில் முதலமைச்சரின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்
திரு. பி.பி. மண்டல் நினைவு நாளில், அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் — பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அந்த உரிமையை மீட்டுக்கொடுத்த சமூக நீதியின் புரட்சிகர தலைவர்.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடை முறைப் படுத்தும் முன்பே திராவிட இயக்கம்,அவரோடு உறுதியாக நின்றது. அவர் போராடிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அவரது துணிச்சலான மற்றும் நியாயமான பரிந்துரைகள் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன, மேலும் சமூக நீதிக்கான போராட்டம் தற்போது புதிய வடிவங்களில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
பி.பி.மண்டல் அவர்களை சிறப்பு செய்வது அவரது முழுமையான பரிந்துரைகளைச் செயல்படுத்துவதாகும், அதை நீர்த்துப்போகச் செய்வதல்ல. அதைச் செயல் படுத்தும் போராட்டத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மண்டல் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடருகிறோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Comment