விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு தமிழ்நாட்டில் 2,095 பேர் கைது
தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர் பலி
சென்னை, நவ.14- தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 பேர் கைது செய்யப்பட்டனர். தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர் பலியா னார்கள்.
பட்டாசு விபத்தில் 2 பேர் பலி
உற்சாகமிகுதியில் பட்டாசு வெடிக்கும்போது சில எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவதும் உண்டு. அந்தவகையில் இந்த ஆண்டு பட் டாசு விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நவிஷ்கா மற்றும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த கோழிப்பண்ணை தொழி லாளி பாலாஜி (வயது41) ஆகி யோர் பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
பாலாஜி குடிபோதையில் இரவில் பட்டாசு வெடித்துள்ளார். காலையில் அதே பகுதியில் தீக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்து இறந்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு விபத்தில் பலியான நவிஷ்கா மீது உறவினர் வெடித்த பட்டாசு விழுந்து வெடித்துள்ளது. இதனால் மார்பில் பலத்த காயம் அடைந்த நவிஷ்காவை மருத்துவ மனைக்கு கொண்டு சென் றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டார்.
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில் 254 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் கூறியதாவது:-
பெரிய விபத்துகள் இல்லை
இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையின்போது பட்டாசு விபத்து களுக்காக 254 அழைப்புகள் வந்தன. இதில் சென்னையில் மட்டும் 102 இடங்களில் விபத் துகள் ஏற்பட்டுள்ளன.
எதிர்பாராத இந்த விபத்துக ளில் சிக்கி மருத்துவமனைகளில் மட்டுமே 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது, மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப் படையில் கணக்கிடப்பட்டு இருக் கிறது.
பெரியளவில் விபத்துகள் பதி வாகவில்லை. அனைத்துமே சிறிய அளவிலான விபத்துகள்தான். இதில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மனைகளில் புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, உரிய மருந்து-மாத்திரைகள் பெற்று வீடு திரும்பி யுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
635 பேர் காயம்
தமிழ்நாடு முழுவதும் லேசான மற்றும் சிறிய அளவிலான தீக்காய சிகிச்சைகளுக்காக 635 பேர் மருத்துவமனைகளை நாடியுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளை மீறிய 2,095 பேர் கைது
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், தீபாவளியன்று (12.11.2023) காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7மணி முதல் 8 மணி வரை யிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த விதி முறைகளை மீறுவோர் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் 12.11.2023 அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ் நாடு முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய் யப் பட்டுள்ளது.
இவர்களில் 2,095பேர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட் டுள்ளது. கைதானவர்கள் பிணை யில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் அதிகம்
சென்னையில் அதிகபட்சமாக நேரக் கட்டுப்பாட்டை மீறி பட் டாசு வெடித்ததாக 554 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்ததாக 19 வழக்குகளும், விதிமுறைகளை மீறி பட்டாசுகள் விற்ற வகையில் 8 வழக்குகளும் என மொத்தம் சென்னையில் 581 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.
20 பேருக்கு தீக்காயம்
சென்னையில் தீபாவளி பண்டி கையின்போது பட்டாசு வெடித்து 20 பேர் தீக்காயம் அடைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 9 பேர் புற நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
9 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப் பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் தீக்காயத்தால் யாரும் அனுமதிக்கப் படவில்லை.