திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி அலுவலகத்தில் பொது மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரம் நடுவிழா நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார் தலைமை வகித்தார். ஆணையர் கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் அருண்குமார், நகர மன்ற உறுப்பினர் லட்சுமி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதார மருத்துவர் அன்பின் இனியன் வட்டார சுகாதார மேற்பார் வையாளர் இளங்கோவன் ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனை வழங்கினர். சுகாதார ஆய்வாளர்கள் பரப்புரையாளர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பரி சோதனை செய்து கொண்ட துப்புரவு பணியாளர் களுக்கு மருந்துகளை வழங்கினர். அதனை தொடர்ந்து மரம் கன்று நடும் நிகழ்வில் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடபட்டது. மருத்துவ முகாம் மற்றும் மரகன்று நடும் விழா விற்கான ஏற்பாடுகளை துப்புரவு பணி மேற்பார்வை யாளர்கள் சையது, பூமாலை, களப்பணியாளர் தனுஷ்கோடி, பணியாளர்கள் ஆகியோர் செய் திருந்தனர். மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளர்கள் பயன்பெற்றனர்.