வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வளாகத்திற்கு நேற்று (11.04.2025) வருகை தந்த தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தும், மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய “டார்கெட் 3 பில்லியன்” புத்தகத்தைப் (இப் புத்தகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைச் சிறப்பித்துப் பல பக்கங்கள் எழுதியுள்ளார்) பரிசாக வழங்கியும் வாழ்த்தினார்.
உடன்: பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.ராமச்சந்திரன், இணைத் துணை வேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பூ.கு.சிறீவித்யா, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தையும், அதன் பல்வேறு புதுமையான முயற்சிகளையும் பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் வந்ததற்கும் தற்போது இருக்கும் மாற்றத்திற்கும் இடையில் பெரிய வளர்ச்சி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். (வல்லம், தஞ்சை, 11.04.2025)