சென்னை, ஜூலை 5- நாட்டின் பருவ மழைக் காலம் எதிர்பார்த்தபடி பரவலமாக தொடங்கியுள்ளது. இது விவசாயத்திற்கு ஆரோக்கியமான சமிக்ஞையாகும். இதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர்வளம் அதிகரித்துள்ளது. இவற்றுடன் அரசுகள் மானிய உதவிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை ஆகியன விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களாகும்.
இவற்றுடன் சோனாலிகா நிறுவனம் ஹெவி டூட்டி டிராக்டர்களை வழங்கி விவாசயத்தை தொழில்நுட்பம் சார்ந்ததாக – குறைந்த விலையில் மேற்கொள்ளத் தக்கதாக மாற்றிவருகிறது. உலகின் நம்பர் 1 டிராக்டர் உற்பத்தி ஆலையை சோனாலிகா கொண்டிருப்பதால் 20 எச்.பி. திறன் முதல் 120 எச்.பி. திறன் வரை உள்ள டிராக்டர்களைத் தயாரித்து அளிக்கிறது. இந்நிறுவனத் தயாரிப்புகளை 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
டிராக்டர் விற்பனை அதிகரித்தது குறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “விவசாயிகளே முதன்மையானவர்கள் என்ற எங்களின் வெற்றிகரமான அணுகுமுறை 2024-ஆம் நிதி ஆண்டிலும் தொடர்கிறது. இதன் வாயிலாக நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மிக அதிகபட்சமாக 40,700 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித் துள்ளார்.