உங்கள் கடவுள் கட்டளையெல்லாம் எல்லா இழிவுகளையும் பொறுத்துக் கொண்டிருந்தால், நீ செத்த பிறகு மேல் உலகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி பெறுவாய். பொறுத்தவர் பூமியாள்வார் என்றுதான் உபதேசிக்கும். இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டு, அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன்தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து, கஷ்டப்பட்டுச் சீக்கிரம் செத்து, கடவுளிடம் சன்மானம் பெறவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே செத்த பிறகு மேல்லோகத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் பயன் பெறலாமென்கிற பித்தலாட்டச் சுயநலச் சூழ்ச்சியான உபதேசத்தை அடியோடு மறந்து, இந்த ஜென்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து, அதற்குத் தகுந்தது செய்ய முன் வர வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’