வல்லம், ஏப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வணிகவியல் துறை சார்பாக ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு நாள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
நான்காவது பன்னாட்டு கருத்தரங்கில், “நீடித்த வணி கவியல் மேலாண்மை செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்கம்” என்ற கருப்பொருளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில், சிறப்பு அழைப்பாளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
பன்னாட்டு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா மற்றும் வணிகவியல் புல முதன் மையர் முனைவர் து. உமா மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் சி.ஏ. மற்றும் சி.பி.ஏ. கமல் சோப்ரா, புதுடில்லி, சி.ஏ. சின்னு பழனிவேலு சிங்கப்பூர், பார்த்திபன் பன்னீர்செல்வம் அமெரிக்கா, சுமையா முகமது, சவுதி அரேபியா, முனைவர் நரேந்திரன் காளியப்பன், மலேசியா, முனைவர் எஸ்.சித்ராதேவி, பெங்களூர், முனைவர் ஜெ.பிளஸ்சா ரத்ன பெல், செகந்திராபாத், மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். பாலகுமார் பிச்சை, பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வல்லம் ஆகியோர் புல வல்லுநர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில், பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் என முந்நூற்றி அய்ம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 250 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
இப்பன்னாட்டுக் கருத்தரங் கினை, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.சுபேந்திரன் மற்றும் கருத்தரங்க அமைப்பாளர் முனைவர் என்.ஜெயந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.