“பெரியார் உலக மயம்” “உலகம் பெரியார் மயம்” என்று தனது 92 ஆவது வயதிலும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்ததற்குப்பின் நேற்று (11.04.2025) மாலை 6.30 மணியளவில் தஞ்சை வல்லம் பாலிடெக்னிக் கல்லூரி வருகை தந்தார். ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி மாநில ப.க ஊடகப்பிரிவு தலைவர் மா அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்ட து.தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம் சந்துரு மாவட்ட தொழிலாளரணத் தலைவர் ச.சந்துரு, மாநகர துணை தலைவர் அ. டேவிட், மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், பேராசிரியர் கு. குட்டிமணி, பெரியார் பிஞ்சு கு. மகிழ்நன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா. திராவிடச்செல்வம் மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவாசன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பு செய்தனர்.
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாநகர தோழர்கள் சிறப்பு செய்தனர்

Leave a Comment