சென்னை,நவ.14- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி கள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வரு கிறது.
இந்நிலையில், இன்று (14.11.2023) கடலூர் மற் றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங் களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
விழுப்புரம், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், கட லூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப் பத்தூர், வேலூர், அரிய லூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, திருச்சிராப் பள்ளி, தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட் டங்கள் மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் அறிக் கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் தயார் நிலையில் உள் ளனர்.
இதே போல தமிழ் நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. அதில் கனமழையை சமாளித்து, உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.