கலைஞரின் கனவு இல்லம்
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-2026ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதியும் ஒதுக்கப்படுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்
அமெரிக்காவின் வரிவிதிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் ஏற்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கவலை தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் ஏற்றுமதி, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் எனவும், இந்த சூழலில் அரசுடன் ரிசர்வ் வங்கி இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். ரூபாயின் மீதான எந்தவொரு அழுத்தத்தையும் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தவறவிட்டதை
சாதித்து காட்டிய மு.க.ஸ்டாலின்..!
சாதித்து காட்டிய மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை
2022-இல் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
அம்பேத்கரின் கூற்றை வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்துள்ளார். அந்த மேற்கோள் இதுதான், “அரசமைப்பு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்”.