இலங்கையிலிருந்து வான்வழியாக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பதிவிட்டிருந்தார். அதன்பிறகு ஹிந்துத்துவவாதிகள் ராமர் பாலம் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றனர். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது Periyar Vision OTT-இல் ‘ராமர் பாலம் – இயற்கையா? செயற்கையா?’ என்ற காணொளியைப் பார்த்தேன். அறிவியல்பூர்வமான விளக்கத்துடன் அதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அரசியலையும் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அந்தக் காணொளி அமைந்துள்ளது. மகத்தான திட்டத்தின்மீது மதச்சாயம் பூசி அத்திட்டம் முடக்கப்பட்டதன் வரலாற்றையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதனால் அனைவரும் தவறாமல் அந்தக் காணொளியை Periyar Vision OTT-இல் பார்க்க வேண்டும். மேலும், இதுபோன்ற நம் அறிவை விரிவடையச் செய்யும் ஏராளமான காணொளிகளை Periyar Vision OTT தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.