ராமேசுவரம், ஏப்.11 தமிழ்நாட்டில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மீன்பிடித் தடைக்காலம்
ராமநாதபுரம் மாவட் டத்தில் 2 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள் ளது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன் படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி அம லுக்கு வருகிறது. ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
இதுகுறித்து ராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழ் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத் திடும் பொருட்டும், 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையி லான இரண்டு மாத காலங்கள் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப் படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படு கிறது. அதன்படி விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கூறிய காலகட்டங்களில் கடலுக் குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது, எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலி நோக்கம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும் தடைக்கால நிவாரணத் தொகையாக ராமநாதபுரம் மாவட்டத் தில் 33 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ 8,000 தடைக்கால நிவாரண மாக வழங்கப்பட உள்ளது.