இலால்குடி பெரியார் திருமண மாளிகையின் உரிமையாளர் தே.வால்டேர் – குழந்தை தெரசா குடும்பத்தினர்.
சிறுகனூரில் அமையுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு இலால்குடி பெரியார் திருமண மாளிகையின் உரிமையாளரும், லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான தே.வால்டேர் – லால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவி குழந்தை தெரசா ஆகியோர் ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், பெரியார் பெருந்தொண்டர் கழகக் காப்பாளர் ப. ஆல்பர்ட் உள்ளனர். (திருச்சி, 11.4.2025)
இலால்குடி பெரியார் திருமண மாளிகையின் உரிமையாளர் தே.வால்டேர் – குழந்தை தெரசா ஆகியோர் அளித்த அன்பளிப்புகளின் விவரம்:
முதன் முதலாக ஆசிரியர் அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்தைப் பார்வையிடும்போது முதலாவதாக பெரியார் உலகத்துக்கு தே.வால்டேர்
குழந்தை தெரசா சார்பாக ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) நன்கொடையாக வழங்கினர்.
இ.ச. இராவணன், அவரது மகன் வால்டேர் ஆகியோர் தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் ஆசிரியர் அவர்களை சந்தித்தபோது பெரியார் உலகத்துக்கு 11 பவுன் நன்கொடையாக வழங்கினர்.
இலால்குடியில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின்போது ஆசிரியர் அவர்களிடம் ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) நன்கொடை வழங்கினர்.
இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் நடந்த விழாவின்போது ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் தே.வால்டேர் அவர்களால் வழங்கப்பட்டது.
திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது தே.வால்டேர் ரூ.1,00,000மும், அவர் அழைத்து வந்த 6 நண்பர்கள் தலா ரூ.1,00,000 வீதம் ரூ.6,00,000மும் ஆக மொத்தம் 7,00,000 (ரூபாய் ஏழு லட்சம்) பெரியார் உலகத்துக்கு நன்கொடையாக வழங்கினர்.
திருச்சி பெரியார் மாளிகையில் ஆசிரியர் அவர்களின் சந்திப்பின்போது பெரியார் உலகத்துக்கு 10 கிராம் தங்க நாணயம் வழங்கினார்.
திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு இலட்சம்) பெரியார் உலகத்துக்கு காசோலையாக வழங்கினார்.
11.4.2025 திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது பெரியார் உலகத்துக்கு ஆசிரியரிடம் ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) காசோலையாக தே.வால்டேர்– குழந்தை தெரசா நன்கொடை வழங்கினர்.
தாளக்குடியில் நடந்த NSS கேம்ப் நிகழ்ச்சியின்போது பார்மசி வளர்ச்சிக்காக செந்தாமரை அவர்களிடம் ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) வழங்கினர்.
ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் அரசியல் சட்டத்தை எரித்து சிறைக்குச் சென்றவர்களுக்கு பெரியார் திருமண மாளிகையின் சார்பாக வால்டேர் மூலமாக மாதா மாதம் 5ஆம் தேதி ரூ.300, அவர்கள் இறந்து விட்டால் ரூ.1000, ஆசிரியர் அவர்கள் பிறந்த நாளுக்கு ஆண்டுக்கு ஆண்டு சிறைக்கு சென்றவர்களுக்கு சால்வை அணிவித்து ரூ.1000 என வழங்கப்படுகிறது. தற்போது ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர்கள் 6 பேர் மட்டும் இருக்கிறார்கள்.
வசதி இல்லாத பள்ளி குழந்தைகள் 14 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மாதா மாதம் 3ஆம் தேதி வழங்கப்படுகிறது.
ஆதரவற்ற முதியவர்கள் 13 பேருக்கு மாதா மாதம் ரூ.300வீதம் 3ஆம் தேதி வழங்கப்படுகிறது.