மாணவர் பருவம் முதல் திராவிடர் கழக கொள்கையால் ஈர்க்கப்பட்டவரும், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், கழகக் காப்பாளருமான வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., (வயது 85) அவர்கள் இன்று (11.4.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
சிறிது காலமாகவே உடல் நலமற்று இருந்தார். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: நாளை (12.4.2025) காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்படும்.