தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த ஆளுநரின் சட்ட விரோதத்தைக் கண்டித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த வழக்கில் முக்கியமாக பங்கேற்று சிறப்பித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி. வில்சன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். (பெரியார் திடல், 10.4.2025)