டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆளுநர் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தொடக்கம், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* கூட்டணி முடிவு, இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரத்தில் மோதல்; அன்புமணியின் தலைவர் பதவி பறிப்பு: ‘இனி நான் தான் பாமக தலைவர்’- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*டிரம்ப் அரசின் புதிய மசோதா: அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் அங்கு தற்காலிக வேலை செய்யும் வாய்ப்பை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டால், அது இந்திய மாணவர் களுக்கு பெரும் தடையாக அமையும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காங்கிரஸ் செயற்குழுவில் சமூக நீதிக்கான தீர்மானங்கள்: 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் பட்ஜெட்டில் பங்கு, தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உரிமை ஆகிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டதாக ராகுல் எக்ஸ் தளத்தில் பதிவு.
தி டெலிகிராப்:
* தலைவர் இல்லாத யு.ஜி.சி: இந்தியா முழுவதும் 1,100 பல்கலைக்கழகங்கள் மற்றும் 50,000 கல்லூரிகளில் கல்வித் தரத்தை நிலை நிறுத்தும் பணியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), கடந்த மூன்று நாட்களாக வழக்கமான அல்லது செயல்படும் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. யு.ஜி.சி. தலைவர் பேராசிரியர் எம். ஜெகதீஷ் குமார் ஏப்ரல் 7 அன்று பதவி ஓய்வு பெற்றார்.
தி இந்து:
* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) நீர்த்துப்போகச் செய்யும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்தில் உள்ள ஒரு பிரிவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி, இந்தியா கூட்டணியின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட தலைவர்கள், அப்துல்லா அப்துல்லா, ஜான் பிரிட்டாஸ், கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா சதுர்வேதி, உள்ளிட்டோர் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
*காங்கிரஸ் ஓ.பி.சி. துறைக்கு புதிய தலைவராக அனில் ஜெய்ஹிந்த் நியமனம்.
– குடந்தை கருணா