ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பிரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கின்றானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படிக் கடவுள் இருப்பதாகக் கூறினால் அவன் எங்கே போய்விட்டான்? கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்றால், அதற்கு ஏன் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளை, ஆறு வேளை சோறு? இவையெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம்? அடிக்கடி மக்களிடம் வந்து போனதாகக் கூறப்படும் கடவுள் இன்று ஏன் வரக் கூடாது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’