தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஏப்.10) பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை ராமதாஸ் வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டி பாமக நிறுவரான நானே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, அன்புமணியை செயல் தலைவராக நியமிக்கிறேன். கவுரவத் தலை வராக ஜி.கே.மணி உள்ளிட்ட பொறுப் பாளர்கள் செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கையை வாசித் தார். அன்புமணி நீக்கத்திற்கான காரணத்தை சிறுகச் சிறுக சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.