செட்டிநாட்டரசர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தைத் தோற்றவித்த பிறகு அதனை வியத்தகு முறையில் வளர்ச்சியடையச் செய்தவரும், அதன் இணைவேந்தர் வள்ளல் இராஜா முத்தையவேள் அவர்களது நம்பிக்கைக்குரிய செயலாளராகப் பல ஆண்டுகளாக இருந்த நாணயமும், அடக்கமும், ஆழமும் மிகுந்த பண்பாளருமான திருமிகு ஏஆர். இராமசாமி அவர்கள் தனது 93ஆவது வயதில் சென்னை அடையாறு காந்தி நகரில் காலமானபோது (4.4.2025) கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து, இறுதி மரியாதை செய்து, இரங்கலைத் தெரிவித்தார்.
நேந்று (9.4.2025) மாலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு புகழ் வணக்கம் தெரிவித்ததோடு அக்குடும்பத்தவர்க்கு ஆறுதல் கூறி மறைந்த அந்தப் பெரியவரின் பண்பு நலன், நட்புறவு பற்றி உரையாடி விட்டுத் திரும்பினார்.