மத்தூர் கி.முருகேசன் இல்ல இணையேற்பு – வரவேற்பு நிகழ்ச்சி

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருட்டினகிரி, ஏப்.10- கிருட்டினகிரி மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் மத்தூர் கி.முருகேசன் – உண்ணாமலை ஆகியோரின் மகன் மு.வீரமணிக்கும்- கிருட்டினகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் வே.மதியழகன் – சுகன்யா ஆகியோரின் மகள் ம.பூஜாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் கழக கூட்டமைப்பு  மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

வரவேற்பு விழா

மத்தூர் மு.வீரமணி – ம.பூஜா – இணையேற்பு – வரவேற்பு விழா நிகழ்ச்சி 6.4.2025- அன்று கிருட்டினகிரி செரீப் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  கிருட்டினகிரி மாவட்ட திமுக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் தே.மதியழகன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன் முடி, பொதுக்குழு உறுப்பினர் இல.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.சீனிவாசன், சீனிமுத்து. இராசேசன், மாவட்ட மகளிரணி தலைவர் மு.இந்திரா காந்தி, மேனாள் மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், நகரத் தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இணைப் புரையாற்றினார்.

வாழ்த்துரை

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன், மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க. துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் பி.கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர திமுக. செயலாளர்கள் அஸ்லாம், வேலுமணி, மாவட்ட தி.மு.க. பகுத்தறிவு கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் கிரி, பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர், விசிக மய்ய மாவட்டச் செயலாளர் அ.மாதேசு, புலி.இராஜேஷ், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, கிருட்டினகிரி மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டிணன், மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், எம்.ஆர்.சி. இரா.பழனி, மத்தூர் ஒன்றிய ப.க. தலைவர் பொன் சிவக்குமார், கழக ஒன்றியத் தலைவர்கள் த.மாது, பெ.செல்வம், அண்ணா அப்பாசாமி, சா.தனஞ்செயன், ஒன்றியச் செயலாளர்கள் பெ.செல்வேந்திரன், செ.சிவராஜ், வி.திருமாறன், நகரச் செயலாளர்கள் அ.கோ.இராசா, பொன்.விசுவநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலை வாணன், ஒசூர் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க.தலைவர் அரூர் சா.இராசேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, திருப்பத்தூர் மாவட்ட ப.க.தலைவர் வே.அன்பு, மாவட்ட ப.க.செயலாளர் கோ.திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பெ.இரா.கனகராஜ், தருமபுரி மாவட்ட ப.க. தலைவர் கதிர் செந்தில், மாவட்ட இளை ஞரணி முனியப்பன், மாவட்ட தொழிலாளரணி மா.சின்ராசு, முருகம்மாள், சிவசக்தி, ஜெ.காயத்திரி கோ.சரவணன, சே.இராமஜெயம், மா.இரகுநாதன், மு.சிலம்பரசன், வசந்தி கணேசன் மற்றும் கிருட்டினகிரி, ஓசூர், திருப்பத்தூர், அரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ் விணையர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நிறைவாக திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் வே.மதியழகன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *