அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச்செயலாளருமான அரூர் சா.இராஜேந்திரன் மற்றும் கோ.முனிரத்தினம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலைக்கு ரூ.4,000/- வழங்கினர். உடன் பழனிசாமி, பிரேம்குமார். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், குத்தூசி குருசாமி படிப்பகம் கதிரவன், அறிவாயுதம் பதிப்பகம் செந்தில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வெங்கடேசன், ராஜ்குமார், சு.க.சங்கர், ஆவணப்பட இயக்குநர் செல்வின் ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்தனர். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் தான் எழுதிய, “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்” எனும் நூல் வெளியீட்டு விழா (13.04.2025)அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் தான் எழுதிய, “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்” எனும் நூல் வெளியீட்டு விழா (13.04.2025)அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மரியாதை நிமித்தமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
”உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்” பொதுச்செயலாளர் த.ஞானசேகரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழகம் மேனாள் மாணவர் சங்கத் தலைவருமான ரூப்சந்தர் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)
விடுதலை வேங்கைகள் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான இரா.தமிழன்பன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்தனர். உடன் தோழர்கள் கல்யாணசுந்தரம், வெ.ராஜசேகரன், ராவணன். (சென்னை பெரியார் திடல், 8.4.2025)