சென்னை, ஏப்.10 அங்கீகாரம் இல்லாத செயலிகளில் ஒளிப் படங்களை வெளியிட வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையிரன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத செயலிகள்
மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று (9.4.2025) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
‘ஜிப்லி’ செயற்கை நுண்ணறிவு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால்’ஜிப்லி கலை ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை ஜியன் வரைகலை ஒளிப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு அலைபேசி செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.
ஆனால், பொதுமக்கள், அறியாமையினால் அங்கீகாரம் இல் லாத செயலிகளிலும் ‘ஜிப்லி’ அனிமேஷன் ஒளிப்படங்களை பெறுவதற்காக தங்களது ‘பயோமெட்ரிக்’ தரவுகளையும், ஒளிப்ப டங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செய லிகள், ஒருவரது ‘பயோமெட்ரிக்’ தரவுகளையும், ஒளிப்படங்க ளையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது. அங்கீ காரம் இல்லாத செயலிகள், ஒருவரது ‘பயோமெட்ரிக்’ ஒளிப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை ‘டீப்பேக்கு’களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. ‘ஜிப்லி’ அனிமேஷன் ஒளிப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், அலைபேசி செயலிகளுக்குள் ஒருவர் செல்லும்போது, அவரது கைப்பேசியும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், அதில் உள்ள தகவல்கள் அனைத் தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இப்படிப்பட்ட இணை யத்தளங்களையும், செயலிகளையும் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையத்தளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவி றக்கம் செய்ய வேண்டாம். பரிவர்த்தனை, சுய விவரங்களை பதி விடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன் மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடியினால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.1.32 கோடி மதிப்பீட்டில்
நவீன வசதிகளுடன் பாவாணர் அரங்கம் புதுப்பிப்பு
சென்னை, ஏப் 10 சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவில் ரூ. 1.32 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை திறந்து வைத்து, 34 முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 56 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நவீன வசதிகளுடன் பாவாணர் அரங்கு
சென்னை அண்ணா சாலையில் உள்ள சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டடடத்தின் முதல் தளத்தில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கு ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தொழில்நுட்ப வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட இந்த அரங்கத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (9.4.2025) திறந்து வைத்தார். இவ்வரங்கம் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 280 நபர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், லைவ் கேமரா உட்பட நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி ஒளி அமைப்பு, எல்இடி வீடியோ திரை மற்றும் உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- 3, 10-தட்டச்சர் மற்றும் ஒரு நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை-2, மொத்தம் 56 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் போது காலமான ஆசிரியர்களின் குழந்தைகள், தொழில்நுட்பக் கல்வி படிப்புகளான பொறியியல், வேளாண்மை, செவிலியர், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டப்படிப்பு (4 ஆண்டுகள் அதற்கும் மேற்பட்டவை) மற்றும் பட்டயப் படிப்பு பயில்வோருக்கு ஆசிரியர் நல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு 12 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.
அதில் முதற்கட்டமாக 4 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 2 இரண்டு லட்சத்துக்கான கல்வி உதவித்தொகையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் பொது நூலகத்துறை இயக்குநர் சங்கர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ராஜேந்திரன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித் திட்டம்) சசிகலா, பொது நூலகத் துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், துணை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் கவிதா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.