தஞ்சையில் பெரும் புலவர் கலியபெருமாள் தலைமையில் மணமக்கள் பி.கே.உதயன்-எஸ்.விஷ்ணுதேவி வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் பி.சேசுபாலன்ராசா ஆகியோர் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை திருமணத்தின் சிறப்புகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மு.அய்யனார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.