மணப்பாறை, ஏப்.9 திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களின் கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை நேருஜி நகரில்
நேற்று (8.04.2025) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மணப்பாறை ஒன்றிய தலைவர் பி. பாலமுருகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.
திருச்சி மாவட்ட செயலாளர் சு.மகா மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ம.சங்கிலிமுத்து, சு.கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சு.ராஜசேகர், மணப்பாறை நகர தலைவர் சி.எம்.எஸ்.ரமேஷ், வையம்பட்டி சக்தி வேல், தாதகவுண்டன்பட்டி ராமன், பகுத்தறிவாளர்கள் துரை.காசிநாதன்,வழக்குரைஞர் துரை.அழகிரி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தோழர்கள் ப.சந்திரன், வி.முருகேசன் பசுலிதீன், ஜபருல்லா மணிவண்ணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,திருச்சி மாவட்டம் மணப்பாறை,மருங்காபுரி, வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் கழகப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்தி பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்திடவும் அதன் மூலமாக புதிய கிளைக் கழகங்களை அமைத்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் அயராத உழைப்பால், அணுகு முறையால் இயக்கத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் கிடைத்துள்ள பெரு மைகள் குறித்து உரையாற்றினார்.
நிறைவாக மணப்பாறை ஒன்றிய செயலாளர் அசோக் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மணப்பாறை, வையம்பட்டி, மருங்கா புரி ஒன்றியங்களில் தொடர்ந்து தெரு முனை கூட்டங்களை நடத்துவதற்கும், அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று உறுதி அளித்த னர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன
சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மணப்பாறை,வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் திராவிடர் கழக அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் இயக்க பிரச்சாரம் கூட்டங்களை நடத்துவது எனவும் அதன் வாயிலாக புதிய கிளைக் கழகங்களை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது
மணப்பாறையில் 1.5.2019 அன்று கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பங்கேற்கும் “மே” நாள் பொதுக்கூட்டத்தை திராவிடர் கழகத்தின் சார்பில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களுக்கு தடையாக தொடர்ந்து செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் எனவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர வையின் முடிவின் படிதான் செயல்பட வேண்டும். ஆளுநர்களுக்குத் தனியாக வீட்டோ அதிகாரம் கிடையாது என உச்சநீதி மன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மகிழ்வுடன் வர வேற்பதுடன், சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற ‘திராவிட மாடல்‘ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையின் படி ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
மணப்பாறை நகர திராவிடர் கழகம்
நகரத் தலைவர்-இரும்பொறை பிச்சை
நகர செயலாளர்-சி.எம்.ஸ்.ரமேஷ்
மணப்பாறை ஒன்றிய திராவிடர் கழகம்
ஒன்றிய தலைவர்-பி.பாலமுருகன்
ஒன்றிய துணைத் தலைவர்-
ப. சந்திரன்
ஒன்றிய செயலாளர்-வி.அசோக்
மருங்காபுரி ஒன்றிய திராவிடர் கழகம்
ஒன்றிய தலைவர் -ராமன்
ஒன்றிய செயலாளர்-வி.முருகேசன்
வையம்பட்டி ஒன்றிய திராவிடர் கழகம்
ஒன்றிய அமைப்பாளர்-
டி.கே. சக்திவேல்
மணப்பாறை ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்
ஒன்றிய தலைவர் -வழக்குரைஞர் துரை.அழகிரி
மணப்பாறை நகர பகுத்தறிவாளர் கழகம்
நகரத் தலைவர்-துரை.காசிநாதன்
நகர செயலாளர்-பசுலிதீன்.