மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.04.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு- 168, கத்திப்பாரா பகுதிகளில் மூலதன நிதியின் கீழ், ரூ.5.53 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை மேயர் மு. மகேஷ் குமார், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் ஆர். துரைராஜ் (அடையாறு), எம்.கிருஷ்ணமூர்த்தி (கோடம்பாக்கம்), மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.