முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.4.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. இராசா, மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோவன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர். எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் உள்ளனர்.