கடலூர் மாவட்டம் – காட்டு மன்னார்குடி மற்றும் திருமுட்டம் பகுதிகளில் திராவிடர் கழகக் கூட் டங்களில் இடிமுழக்கமாய் முழங்கி இயக்கத்தைக் கட்டமைத்த தமது எழுச்சியான பேச்சாற்றலால் பெரியாரது தத்துவங்களை மக்களிடம் கொண்டு சென்ற இடிமுழக்கம் மு.பாலகுருசாமி நேற்று (8.4.2025) மாலை 7 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திராவிடர் கழக இளைஞரணியில் பணியாற்றி ஆசிரியர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று (9.4.2025) மாலை சிறீமுஷ்ணம் வட்டம் சாவடிக்குப்பம் அவர்தம் இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
– – – – –
இராசபாளையம் மாவட்ட கழக துணைத் தலைவர் பூ.சிவக்குமாரின் தாயார் பூ.பழனியம்மாள் (வயது 78) நேற்று (8.4.2025) இரவு மறைவுற்றார். மாவட்ட தலைவர் இல.திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.பாண்டி முருகன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். கழகத் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் ஆகியோர் சிவகுமாரிடம் தொலைபேசி மூலம் இரங்கலைத் தெரிவித்தனர்.