முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பழனி மாவட்ட மேனாள் தலைவர், திருமலைச்சாமியின் மகன், சிறந்த பேச்சாளர், பழகக்கூடிய பண்பாளர், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவராக பொறுப்பு வகித்தும், தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருந்தும் செயல்பட்டு வந்த தி.குணசேகரன் (வயது 65) இன்று (09.04.2025) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
9.4.2025
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: மறைவுற்ற தி.குணசேகரனுக்கு கு.ராஜேஸ்வரி என்ற துணைவியாரும், இரண்டு மகள்கள் இரா.கு.கவிநிலவு, இரா.கு.தென்றல் உள்ளனர்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் ஒட்டனாகம்பட்டி அவர்களது இல்லத்தில் காலை 11 மணிக்குப் புறப்பட்டு ஒட்டன்சத்திரம் மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.