மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர், கோவி.அன்புமதியின் மாமனாரும், எஸ்.பிரபாகரன் தந்தையுமான வி.எஸ்.சுப்ரமணியம் 7.4.2025 அன்று காலை 7.05 மணியளவில் மறைவுற்றார்.
அவரது உடலுக்கு மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட மகளிரணி தலைவர் கை.அறிவுமதி, எடப்பாடி கழகத் தலைவர் சா.ரவி, நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், அமைப்புசாரா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.என்.குணசேகரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மாலை 4 மணியளவில் மேட்டூர் மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சி.மதியழகன் மற்றும் சேலம் மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராசு ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மறைவு

Leave a Comment