கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.4.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது செயல் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. அரசியல் அமைப்பின் 142ஆவது பிரிவை பயன்படுத்தி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடி. இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக தொடர முடியாது என்கிறார் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், எம்.பி.
* வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; அனைத்து மாநிலங் களுக்கும் கிடைத்த வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் நிறைவேற்றம்.
* தெலங்கானா ஜாதிவாரி சர்வேக்கு காங்கிரஸ் செயற்குழுவில் பாராட்டு.
* சர்தார் படேலின் பெருமையை சீர்குலைக்க பாஜக முயல்கிறது, காங்கிரஸ் செயற்குழுவில் கண்டன தீர்மானம்.
* அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவோர் உடன் செல்லவில்லை என்றால், நாள் ஒன்றுக்கு 998 அமெரிக்க டாலர் அபராதம், டிரம்ப் அரசு அறிவிப்பு.
* ஆளுநர் அதிகார வரம்பு குறித்த உச்ச நீதி மன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு உகந்தது, தலையங்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்கு உச்சநீதி மன்றம் சம்மட்டி அடி. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது உச்சநீதிமன்றம்.
* ‘துன்பகரமான’ அரசாங்கத்திற்கு ‘கும்பகர்ணன் போன்ற’ தூக்கம்: கேஸ் (CNG, LPG) விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்குகள் வரும் 15ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
தி டெலிகிராப்:
* மசோதாக்களுக்கு இனி ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது: உடனடியாக இந்த மசோதாக்களை ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாமதப்படுத்தும் தந்திரோபாயத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
* பாஜக தலைவர் பதவி; மோடி-அமித்ஷாவுக்கு ஜால்ரா போடுபவராக இனி ஒருவரும் நியமிக்க கூடாது, ஆர்.எஸ்.எஸ். திட்டவட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்கிற்கு எதிரான எச்சரிக்கை. ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *