கவிஞர் கலி.பூங்குன்றன்
கழகமும் – சங்கராச்சாரியார் எதிர்ப்பும்
சங்கராச்சாரியார் பகிஷ்காரம்
பெரியார் அறிக்கை (25-5-1966)
சங்கராச்சாரியார் பகிஷ்காரம்
பெரியார் அறிக்கை (25-5-1966)
நமது நாட்டில் சங்கராச்சாரியார் சுற்றுப் பயணம் என்னும் பேரால் வர்ணாசிரமப் பிரச் சாரம் நடை பெறுவதாலும் அந்த வர்ணாசிரமப் பிரச்சாரச் சலுகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு சமதர்மத்திற்கு விரோத மான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாலும் சங்கராச் சாரியார் தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களுக்கு எப்படியாவது காங்கிரசை இப்போதைய தேர் தலில் வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்கிற பிரநாத (பேரொலி) பிரச்சாரம் செய்வதாலும், மக்களுக்கு விளக்கம் தெரிவிப்பதற் காகவும், தற்காலம் நடைபெறும் அரசாங்கத்திற்கு இதனால் கேடோ, எலக்ஷனில் தோல்வியோ ஏற்படாமல் இருக்கச் செய்வதற்காகவும் வர்ணாச்சிரம எதிர்ப்புப் பிரச்சாரமாக ‘சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம்” செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆதலால் அண் மையில் முதலாவதாக திருவண்ணா மலையில் சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வேலூரில்
30-5-1966 வேலூரில் சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி! வேலூர் நகர சபை சங்கராச்சாரியை வரவேற்பதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சத்துவாச்சாரி தோழர்கள் பிச்சாண்டி, தியாகராசன், நகரத் தலைவர் தாமோதரம், செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு முடிந்தபின் இரவு 9.30 மணிக்கு விடுவிக் கப்பட்டனர். சாமி. சம்மாரம் மற்றும் தோழர்கள் விடுதலையான தோழர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
வடஆர்க்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டி, சங்கராச்சாரியாருக்குக் கண்டனக் கிளர்ச்சி
3.6.1966 அன்று ராணிப்பேட்டையிலிருந்து முத்துக்கடை வரை சங்கராச்சாரியார் பகிஷ்கார சுவரொட்டிகளை செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன், ஆர்க்காடு இளங்குப்பன், வேணு கோபால் ஆகியோர் ஒட்டினர். அவற்றைக் கவால்துறையினர் கிழித்துவிட்டனர். அதற்கு முன்னர் நல்ல விளம்பரம் ஆகிவிட்டது. பிறகு வாலாஜாபேட்டையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி
(சுவரொட்டி வாசகம் வர்ணாசிரம சங்கராச் சாரி ஒழிக! ஒழிந்து போ!!)
13.6.1966 மாலை சென்னை மயிலாப்பூரில் நடைபெறவிருக்கும் மடாதிபதிகள் மாநாட்டுக்கு வருகை தந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோருக்கு மயிலாப்பூர் குளக்கரை அருகில் வெங்கடேச அக்ரகாரம் தெரு முனையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட தி.க. தலைவர் டி.எம். சண்முகம், செயலாளர் டி.வி. தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. நகரெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே பகிஷ்காரக் கிளர்ச்சியை தந்தை பெரியார் அவர்களும், கைவல்யம் சாமியாரும் 60 ஆண்டுகளுக்கு முன்னமே செய்துள்ளார்கள் என்பதை அறிக்கை மூலம் பெரியார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலந்துகொண்டோர்:
டி.எம். சண்முகம், பி.ஈ. பக்தவச்சலம், டி.வி, தட்சிணாமூர்த்தி, அ.குணசீலன், மு.போ, வீரன், கே. நடராசன், என். தேவராசன், கே. கல்யாணி, எம். வேணுகோபால், டி.கே. கோபால், புண்ணியகோட்டி, டி, குப்புசாமி, செங்கண்ணன், ஆர். வெங்கடாசலம், கே. ஆறுமுகம், எம். கணேசன், பி. ஏழுமலை, என். பாலகிருஷ்ணன், த. கன்னியப்பன், மயிலை சம்பந்தம், ஏ.கே. சேகர், எம். வாசு, ராமன், டி. மதுரை, தட்சிணாமூர்த்தி, திருமதி ராஜம்மாள், சே. ஏழுமலை, வேதகிரி, ஏ. லோகநாதன், எஸ். சீனுவாசன், கே. தாமோ தரன், சிங்காரம், கோவிந்தசாமி, சக்கரபாணி, பி. சின்னையா, கே. மோகன், எம். ரங்கநாதன், ஆர். கணேசன், என். தணிகாசலம், சந்திரன், கே.பி. சந்திரன், கே.வி.ஆர்.எஸ். நாகய்யா, பி. ஜானகிராமன்.
பார்ப்பனர் காலித்தனத்துக்குக் கண்டன நாள்!
20.11.1966 ஞாயிறு அன்று தமிழ்நாடெங்கும் நடைபெற வேண்டும்!
தந்தை பெரியார் அறிக்கை
(முகாம் – குடந்தை – 123.11.1966)
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், பார்ப்பனக் குண்டர்கள் டில்லியில் காமராசரைக் கொல்ல (7.11.1966) அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைக்க முயற்சித்த அடாத செயலைக் கண்டிப்பதன் அறிகுறியாக 1966 நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை பார்ப்பனரின் கொலை பாதகக் கண்டன நாளாக தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு, சங்கராச்சாரியார்கள் சாமியார்கள் குண்டர்கள் ஆகியவர்களைக் கண்டித்துப் பேசி, “யாவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
– ஈ.வெ.ராமசாமி
நெல்லையில் தீர்மானம்
நெல்லையில் (13-7-1980) பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு தீர்மானம் 14 கூறுவதாவது: வர்ணாசிரம தர்மம் – ஜாதி முறை காப்பாற்றப்பட வேண்டும் என்பதை சங்கராச்சாரியார் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும், சிருங்கேரி சங்கராச்சாரியார் குலதர்மத்தைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும் கண்டு இக்கூட்டம் (மாநாடு) வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜாதி, தீண்டாமை, பாதுகாப்புப் பிரச்சாரம் செய்யும் சங்கராச்சாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கு மாறு மத்திய – மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சென்னையில்
28-12-1982 அன்று சென்னை சைதை திருவொற்றியூர், கலைஞர் நகர் பகுதியில் சங்கராச்சாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டவரும் இந்து என்றால் சங்கராச் சாரியாக நியமிக்கத் தயாரா? என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தீர்மானம் 6:
13.6.1982 நீண்டகாலமாக வடநாட்டின் பல மாநிலங்களில் வேரூன்றி வன்முறைக் கலவரங்களைத் தூண்டுதல் மூலம் ஆரிய தர்மத்தைப் பரப்பும் பார்ப்பன மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் குறிப்பாக அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாக அதன் அணி வகுப்புகளை நடத்தி வருவதையும் நெல்லை – குமரி போன்ற மாவட் டங்களில் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திடு வதையும் இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் என்பவர் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அணி வகுப்புகளில் கலந்து ஆசியுரை கூறியும் ஆர்.எஸ்.எஸ்.,சுகுப் பகிரங் கமாக ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டும் வருகிறார். சங்கராச்சாரியார் களின் இந்தச் செயல் தமிழர்களுக்கு விடப்படும் சவால் என்பதால் இந்நிலையை மேலும் அவர் தொடர ஆரம்பித்தால் அவர் போகும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டுவதுபற்றி யோசிக்கப்படும் என்றும், இதன் இறுதி முடிவை கழகப் பொதுச் செயலாளர் மேற்கொண்டு அறிவிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு (திருச்சி) பொதுச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
சங்கராச்சாரி – யார்?
தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மணி விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ‘காமகோடி’ என்ற சொற்களைக் கொஞ்சம் பிரித்துச் சொன்னார்.
அவ்வளவுதான், மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு பீறிட்டது காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு.
எழுத்தாளர் சின்னக்குத்தூசி, ஞானி ஆகியோர் ஜெயேந்திரரின் அழைப்பின் பேரில் காஞ்சிமடம் சென்று அவரைச் சந்தித்தபோது கலைஞர் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல் லட்டும்; நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும்? எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே தான் அவருக்குத் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண் டேன். அதன்படியே கருணாநிதி படுத்துண்டார்” என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் குறிப் பிட்டுள்ளார்.
(ஆதாரம்: மானமிகு கி. வீரமணி அவர்களின் சங்கராச்சாரி-யார்?’ நூல் பக்கம் 3)
இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் “சங்கராச்சாரி-யார்?” என்ற தலைப்பில் பத்து சொற் பொழிவுகள் பேசினார். அதன் விவரம் வருமாறு:
சிறப்புக் கூட்டங்கள்
நாள்கள் தலைமை
நாள்கள் தலைமை
6.4.1983 கீ. இராமலிங்கனார்
28.5.1983 தெள்ளூர் தருமராசன்
5.6.1983 கா. அப்பாத்துரையார்
14.6.1983 சுரதா
18.6.1983 மா. நன்னன்
27.6.1983 ந.இராமநாதன்
7.7.1983 பொன்னிவளவன்
18.7.1983 கே.எல். பழனிசாமி
23.7.1983 இறையன்
18.1983 பெருஞ்சித்திரனார்
(முதல் கூட்டம்: சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில்; மற்றவை சென்னை – பெரியார் திடலில் நடந்தன)
இந்தப் பத்து உரைகளும் ‘சங்கராச்சாரி- ‘யார்?’ என்ற தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்தது. (முதல் பதிப்பு 1986)
பின்னர் இங்கிலீஷில் The Saint or Sectarian? என்ற பெயரில் வெளி வந்துள்ளது (1988),
மோசடியில் பிறந்த சங்கரமடம் என்பதில் தொடங்கி ‘நாத்திகனுக்கு வைத்தியம் பார்க் காதே!’ என்று கூறும் அளவுக்கு சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மனிதாபிமான மற்றவர்; சங்கர மடத்தில் உண்டாக்கப்பட்ட அறக்கட்டளைகள் அனைத்து மூலமும் பயன் பெறுவோர் அனைவரும் பார்ப்பனர்களே;
ஆதிசங்கரர் நடத்திய ஆபாச சோதனைகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்டுள்ளது அந்நூலில். அத்தளைக்கும் ஆதாரங்கள் அடுக்கடுக்காகக் கொடுக்கப்பட்டன. அந்த நூலை எதிர்த்து ஒரே ஒரு வரிகூட இதுவரை சங்கர மடக்காரர்களாலோ பார்ப்பனர் களாலோ எழுதப்படவில்லை என்பது அடி கோடிட்டுக் காட்டத்தக்கதாகும்.
கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (6.2.1984)
வர்ணாசிரம வெறியர் காஞ்சி சங்கராச்சாரி யாருக்கு எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசே வரவேற்புத் தரும் போக்கைக் கண்டித்து வேலூர் – காட்பாடி இரயில் நிலையம் அருகில் கறுப்புக் கொடி காட்டத் திரண்டார்கள் திராவிடர் கழகத் தோழர்கள். அதிமுக அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், சவுந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரி களுக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி தலைமை வகித்தார். க. பார்வதி (மாநில மகளிரணி செயலாளர்) துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, இவர்களுடன் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மண்டல் குழுவுக்கு எதிர்ப்புக் கூறிய காஞ்சி சங்கராச்சாரிக்குத் தஞ்சாவூரில் கறுப்புக் கொடி (9.4.1990)
தஞ்சையில் காலை 8.30 மணியளவில் இராயபுரம் கோபால் தலைமையில் மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்துப் பேட்டியளித்த காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரிக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி மற்றும் ஏராளமான கழகத் தோழர் களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தஞ்சை ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ கொடுக் கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தது.
(தொடரும்)
தமிழ்மீது சங்கராச்சாரியாரின் துவேஷம்
அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்துகூட மாணவர்களிடையே பேசினார்.அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட அவரைக்கண்டு தரிசித்தனர். ஆனால், என் தந்தையார் மட்டும் போகவில்லை. பிறகு, சில நாள்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச்சாரியாரைக் கண்டு தரிசித்து வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணி தேசிகருக்கு அய்யரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:
“தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர். அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார்களாம். தமிழில் பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின்தான் தமிழில் பேசுவார்களாம். ஆதலால், அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்?” என்றார்.
(‘நான்’ எனும் நூலில் வரலாற்றுப் பேராசிரியர். ந.சுப்பிரமணியன் பக். 65-66)
குற்றவாளிகள்
உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் பஞ்சமர் களின் தீட்டைப் போக்க முடியாது.
சிருங்சேரி சங்கராச்சாரியார் (The Hindu Ideal)
தீண்டாமை க்ஷேமகரமானது
(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி)
(ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள் 2-ஆம் பாகம்)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சகர்கள் ஆகத் தகுதியில்லை அவ்வளவுதான்! மேலே இதைப்பற்றிய விவாதத்துக்கே இடமில்லை.
– பூரிசங்கராச்சாரியார்
(ஆனந்தவிகடன் 16.6.1974)
பூணூல் போட்டதனால் மட்டுமே ஒருவன் பிராமணனாக மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம் (கல்கி’ 11.4.1982)
குறிப்பு: தீண்டாமையை அனுசரித்தால் சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 17-ஆவது பிரிவு கூறுகிறது. பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும் இது. ஆனாலும் வெளிப் படையாகத் தீண்டாமையை வலியுறுத்தும் இந்தச் சங்கராச்சாரியார்கள் தைரியமாக உலா வருகிறார்களே!