சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.8 திராவிட இயக்க தலைவர் களில் ஒருவ ரான டபிள்யூ. பி.ஏ.சவுந்தர பாண் டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டமன்றத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கைமீதான விவாதத்தில் 7.4.2025 அன்று ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசினார்.
அப்போது நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான, தியாகி சவுந்தர பாண்டியனா ருக்கு மணிமண்டபம் கட்ட நட வடிக்கை எடுக்கப்படுமா? என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனாருக்கு, மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப் பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப் படும் என்றார்.
மனோஜ் பாண்டியன்: எனது கோரிக் கையை உடனடியாக ஏற்று, அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.