தஞ்சை, ஏப். 8- தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக்கல்லூரி சார்பில், கல்லூரி ஆண்டு விழாவில் சமூக சேவைக்கான “குந்தவை” விருதினை குந்தவை நாச்சியார் அரசுகல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் வழங்கிடப் பெற்ற தஞ்சை மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வனுக்கு 28.03.2025 அன்று காலை தஞ்சை கீழவீதி பெரியார் இல்லத்தில் மாவட்ட, மாநகர கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மாவட்டக் காப்பாளர் மு.அய் யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா . ஜெயக்குமார், மாநில ப.க ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராமப் பிராச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர் இரா. வீரகுமார், மாநகர துணை தலைவர் அ. டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், கீழவாசல் பகுதி தலைவர் த.பரமசிவம், தஞ்சை மாவட்ட ப.க. இணைச் செயலாளர் லெட்சுமணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ. பெரியார் செல்வம், மாணவர் கழகத் தோழர் வீ. மகிழன், குடும்ப விளக்கு மேலாளர் வேணுகோபால், அசோக் மற்றும் பணியாளர்கள், வாகன ஓட்டுநர் அண்ணாதுரை, ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்
அனைவருக்கும் மாநகரத் தலைவர் தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தார்.