டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா கண்டனம்.
* தனது இலங்கை பயணத்தின் போது, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எதுவும் இலங்கை அதிபருடன் விவாதிக்க வில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச் சாட்டு.
* கடந்த காலத் தவறுகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்கிறது, பீகார் பேரணியில் ராகுல் ஒப்புதல்.
* வக்பு மசோதாவுக்கு எதிரான மனுக்கள்: ‘பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்’- தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
* அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி: இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு
* பெட்ரோல், டீசல் வரி ரூ.2 அதிகரிப்பு; சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய பங்குச் சந்தைகள் 5 சதவீதம் சரிந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “மாயையை உடைத்துவிட்டார்” என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி “எங்கும் காணப்படவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
* குஜராத் மாநிலம் வாபியில் நடந்த ராம நவமி பேரணியில் நாதுராம் கோட்சே பதாகையால் பரபரப்பு; சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியது.
* வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆ.ராசா! உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிராக இதுவரை 8 வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூக காங்கிரஸ் தலைவர் திகாரம் ஜல்லி ராமர் கோவிலுக்கு சென்றதால் தீட்டு; பாஜக தலைவர் ராமர் கோவிலில் கங்காஜலைத் தெளித்து புனிதப்படுத்தினார். அவரது செயல் அரசியல் வட்டாரங்களில் பரவலாக சீற்றத்தை ஏற்படுத்தியது.
* ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழலான ஆர்கனைசரின் ஆன்லைன் பதிப்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவுடன் கேரளாவில் தனது காலடியை வலுப்படுத்த பாஜகவின் முயற்சிகள் பாதிப்பு. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் மீது வலதுசாரி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் செய்திகளை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது,
– குடந்தை கருணா