மதுரை, ஏப். 7- மதுரை பெரியார் மய்யம், பெரியார் வீரமணி அரங்கில் 30-03-2025 மாலை6-30மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய சிறப்புக்கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பணிநிறைவுபெற்ற கல்வி அலுவலருமான ச.பால்ராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் பா.சடகோ பன் அனைவரையும் வரவேற்றார். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ப.க.. மாவட்டச் செயலாளர் வீர.பழனிவேல்ராஜன் நோக்கவுரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் சே.முனியசாமி சிறப்புரையாற்றிய பேராசிரியருக்கு ‘விறகு வண்டி முதல் விமானம்வரை’ என்னும் தனது புத்தகத்தை வழங்கினார்.
முனைவர் வா.நேரு தொடக்கவுரை யாற்றினார். அவர் தனது உரையில்;- “உலகம் முழுவதும் இருக்கும் தமிழர் களை இணைக்கும் பாலமாக இன் றைக்கு திருக்குறள் விளங்குகிறது.அமெரிக்காவிலிருந்து மதுரைக்கு வருகை தந்த தாமஸ் கிட்டோசி புருக் சிமா என்பவர், திருக்குறளைப் பற்றி அறிந்து அதைப் படிப்பதற்காகவே தமிழ் மொழியைப் படித்திருக்கிறார். திருக்குறளை காவி அடிப்படையில் சிலர் வேற்று மொழியில் மொழி பெயர்க்கிறார்கள். அதை நாம் கவன மாக பார்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டதோடு சிறப்புரையாளர் பேரா.ஆ.த.பரந்தாமனை பற்றியும் மதுரை யாதவர் கல்லூரிக்கும் பகுத்தறிவாளர் கழகத்திற்கும் இருக்கும் தொடர்பைப்பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
பெரியார் கொள்கைகளை.
உரைவீச்சாளரைஅறிமுகம்செய்து. தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் உரையாற்றினார் . மதுரை யாதவர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மய்யத்தின் தலைவர்.உடுமலை நாராயணகவி பற்றியும்,முதியோர் இல்லங்கள் பற்றியும் ஆய்வு செய்து, முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.இவரது தந்தை மூ.தர்மலிங்கம் மதுரை மாநகரில், தி.மு.க.வின் பல்வேறு பொறுப்புகளிலும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவராகவும்இருந்தவர். நகைச்சுவை கலந்து மக்கள் மனதில் நிற்கும் வண்ணம் உரையாற்றக்கூடியவர்.பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். தனது திருமணத்தைக் கலைஞர் அவர்கள் தலைமையில் சனிக்கிழமை நடத்திக்கொண்டவர் என்று பேரா.ஆ.த. பரந்தாமனை அறிமுகம் செய்து உரை யாற்றினார்.
தோழர் இரா.அழகுப்பாண்டியின் மகன்பெரியார் பிஞ்சு அ.நன்னன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கெடுக்கக்கூடியவர் என பா.சடகோபன் அறிவித்த நிலையில்மேடைக்கு அழைத்து திருக்குறள் சொல்ல வைத்தார். நன்னனுக்கு பேராசிரியர் பரந்தாமன் ஆடை அணிவித்துப் பாராட்டினார்.
தந்தை பெரியாரும்
– அறிஞர் அண்ணாவும்
‘வள்ளுவமும் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய முனைவர் ஆ.த.பரந்தாமன் திருக்குறளில் உள்ள ‘இறைமாட்சி’ அதிகாரத்தையும், செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களைக் குறிப்பிட்டு,அதனை நடப்பு அரசிய லோடு பொருத்தி, நகைச்சுவை கலந்து கொடுத்தார். திருக்குறளைப் பரப்பத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞர் அவர்களும் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட்டார். கலைஞர் காலத்தில் குமரி முனையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை,வள்ளுவர் கோட்டம், பேருந்துகளில் திருக்குறள் என எல்லா நிலைகளிலும் திருக்குறளை முதன்மைப்படுத்தியதையும்,வெறும் வெற்று வார்த்தைக்காக ஒன்றிய அரசில் இருப்பவர்கள் திருக்குறளை உச்சரிப்பதையும் குறிப்பிட்டு,தனக்கு முன்னால் பேசிய பலரும் பேசியதை சுட்டிக்காட்டி மிகச்சிறப்பாக உரை யாற்றினார்.
வந்திருந்த அனைவரையும் வரவேற்று, தேநீர் வழங்கி கையெழுத்துப் பதிவு உள்ளிட்ட பணிகளில் சீ.தேவராஜ் பாண்டியன்,சோ.சுப்பையா,,பா.சடகோபன்,க.அழகர், நன்னன், மற்றும் தோழர்கள் செய்து துணைநின்றனர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இராம.வைரமுத்து பேராசிரியருக்கு ஆடை அணிவித்துப் பாராட்டினார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அ.வேல்முருகன், ராக்கு தங்கம், க.நாகராணி, மகாமதி, திவ்யதர்ஷினி, வடக்கு மாசி வீதி ஈபி.முத்தையா,சேகர்,செல்லத்துரை,இரமேஷ், ஸ்டுடியோ சரவணன்,ஜேஎஸ், மோதிலால் ,முரளி, மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி, பொ.பவுன்ராஜ், சொ.நே.அன்புமணி, பெத்தானியாபுரம் பாண்டி, பெரி.காளியப்பன் எல்அய்சி செல்லகிருட்டினன், ச.வேல்துரை, ஆட்டோ செல்வம், நா.மணிகண்டன், தனுஷ்கோடி,தி.இ.த. பேரவை ஸ்டுடியோ சரவணன் மேலும் பேராசிரியருக்கு சிறப்பு செய்ய கல்லூரி மாணவர்கள் வருகை தந்தனர்.நிறைவாக இரா.அழகுப்பாண்டி நன்றி கூறினார்.